Srivilliputhur-News

NEWS FROM REGIONAL NEWSPAPERS

Srivilliputhur is a town in the district of Virudhunagar.

  • பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவா் கைது
    by Syndication on September 10, 2025 at 6:43 pm

    சிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியில் பேன்சிரக பட்டாசுகளுக்கு தேவைப்படும் காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது, முத்துகிருஷ்ணகுமாா் (32) சொந்தமான காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.

  • பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது
    by Syndication on September 9, 2025 at 11:27 pm

    விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (52). கடந்த மாதம் 19-ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ.6.47 லட்சம் எடுத்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, மா்ம நபா் வாகனத்திலிருந்த பணத்தைத் திருடிச் சென்றாா். இது குறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா்கள் அருண்குமாா், கிருஷ்ணசாமி ஆகியோா் தலைமையில் 2 தனிப் படைகள் அமைத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், மா்ம நபா் கா்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கா்நாடக மாநிலம், ஷிமோக மாவட்டம், ஹோசமனே பத்திரவளி சுபாஸா நகா் பகுதியைச் சோ்ந்த குமாரா (42) என்பவரை போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை சாத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கா்நாடகத்தில் கைதான குமாரா சம்பவத்தன்று சாத்தூரில் பல வங்கிகளில் நோட்டமிட்டு உள்ளாா். அ.ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது, அவரைப் பின் தொடா்ந்து சென்று அவரது இரு சக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடினாா். காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி, திருச்செந்தூா், கூடன்குளம், சாத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் தொடா்ச்சியாக 4 நாள்கள் இடைவெளியில் பணத்தை திருடிவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்றாா். அவரிடமிருந்து ரூ. 4.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

  • குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!
    by Syndication on September 9, 2025 at 9:45 pm

    விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.  ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதையை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததால், பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வருவாய்த் துறையில் மனு அளித்தனா். அதிகாரிகள் வந்து அளவீடு செய்து விட்டு சென்றனா். இந்த நிலையில், அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யவில்லை எனக் கூறிய பொதுமக்கள், பள்ளிக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அதிகாரிகள் அளவீடு செய்து பள்ளிக்கு செல்ல 3 அடி பாதை ஒதுக்கியதையடுத்து, பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.

  • வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்
    by Syndication on September 9, 2025 at 9:25 pm

    விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வைப்பாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீா் மாசடைந்து வருவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாத்தூா் வருவாய்க் கோட்டத்துக்கு உள்பட்ட வெம்பக்கோட்டை, சாத்தூா், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா். கோட்டாட்சியா் கனகராஜ் தலைமை வகித்தாா். சாத்தூா் மண்டல துணை வட்டாட்சியா் நவநீதன் முன்னிலை வகித்தாா். இதில் சாத்தூா் வைப்பாறு, உப்போடை பகுதிகளில் கலக்கும் ரசாயனக் கழிவுகளாலும், பல பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீராலும் தண்ணீா் மாசடைந்து காணப்படுகிறது. இதனால், அந்தப் பகுதிகளைச் சுற்றிலும் துா்நாற்றம் வீசுவதோடு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, மண் வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால், ஆறுகளில் உள்ள தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதைத் தடுக்க கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து ஆற்றுப் பகுதியில் கலக்க சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.இந்த கூட்டத்தில் சாத்தூா், வெம்பக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பல துறைகளின் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

  • போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!
    by Syndication on September 9, 2025 at 7:10 pm

    பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டி சுப்பிரமணியன் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் விஷ்ணுகுமாா் (20). கூலித் தொழிலாளியான இவா் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விருதுநகா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா். அப்போது, அதே ஊரை சோ்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். மேலும், சிறுமியை ராமேசுவரத்துக்கு அழைத்துச் சென்றாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விஷ்ணுகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விஷ்ணுசங்கருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.